Monday 19 November 2012

“எழுச்சி பெறுவாய் இளைஞனே”


                          
எழுச்சி பெற்று வா!
ஏற்றம் காண்போம் வா!
இடர்கள் களைந்து வா!
இந்தியன் நீயே வா!
இளைஞனும் நீயெ வா!

எறும்பு ஊரிடதான்!
உரத்த கல்லும் தேயும் பார்!
எறும்பு அல்லவே நீ!
கணத்த இரும்பு அல்லவோ நீ!

ஊரிடம் உனக்கென்று மதிப்புண்டு!
உன் நரம்பிலும் உடம்பிலும் துடிப்புண்டு!
பல உலக நாடுகளில் நடிப்புண்டு
உன் ஏடுகளில் மட்டுமே சிறந்த படிப்புண்டு
இந்தியத் தாயின் பிடிப்புண்டு-அதற்கு
இன்னல் தவிர்க்கும் திறம் உண்டு
இளமை என்னும் பலம் கொண்டு- நீ
திறமை வளர்த்து வா நெஞ்சுரம் கொண்டு

வாழ்ந்து காட்டுவாய் உனக்காக-என்றும்
வீழ்ந்து விடாதே பிறர்காக
தங்கம் எறிப்பது எதற்காக-அது
அணி நகையாய் மாறிடுமே அதற்காக……….!!

No comments:

Post a Comment