Thursday, 4 April 2013

நெல்லுமணி உருவாக்கும் கண்ணுமணி


துள்ளித் தாவி நாளாச்சு..-உன்
தாவு தண்ணி தீந்தாச்சு…
மருத நிலம் பாழாச்சு..-அந்தப்
பாலைக்குப் போட்டியா வந்தாச்சு…
வானத்துல கருமை காணலயே..-அந்த
சாமிக்கும் இது தோணலயே…
குளமெல்லாம் குட்டையா பொயிட்டுதே…-உன்
கண்ணுலதான் உப்பு நீரு ஊறிட்டுதே….
வெசமும் தான் உன் விசனம் அறியுமடா…-நீ
தூக்கிட்டா அந்தத் தாம்புக் கயிறும் அழுவுமடா…
கல்லு மண்ணு சேத்து பாலம் கட்டுறவங்களே…-இவன்
நிலம் எல்லாம் பாலமா வெடிப்பு விட்டக் கதைக் கெளுங்களேன்…
காலம் ஒண்ணு வருமடா என் தங்கமணி….- உன்
காலுக்கடியில் சனம் விழுமடா என் செல்லமணி…
மூட்டை மூட்டையா குவிச்ச நீ நெல்லுமணி…
நெசம் ஒரு நாள் புரியுமுடா என் கண்ணுமணி…